2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

TYAX (Private) Ltd உடன் Axis கொமியுனிகேஷன்ஸ் கைகோர்ப்பு

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெட்வேர்க் வீடியோ பொருட்களுக்கான சந்தை முன்னோடியாக திகழும் Axis கொமியுனிகேஷன்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், நெட்வேர்க் பொருட்கள் மற்றும் சாதனங்களின் முன்னணி விநியோகத்தரான TYAX (Private) Ltd ஆகியன உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இதன் மூலம் இலங்கையில் Axis நெட்வேர்க் வீடியோ பொருட்களுக்கான விநியோக செயற்பாடுகளுக்கான விநியோகம் தொடர்பிலான தமது பங்காண்மை பற்றி அறிவித்துள்ளன. இலங்கை மற்றும் மாலைதீவுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் யுஒளை நெட்வேர்க் வீடியோ தயாரிப்புகளை நேரடியாக பெற்றக் கொள்ளக்கூடிய வசதி TYAX (Private) Ltd நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

TYAX (Private) Ltd நிறுவனம், பரந்தளவு தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், வலையமைப்பு பொருட்கள் மற்றும் தீர்வுகள் ஆகியவற்றை சந்தைப்படுத்தி வருகிறது. இதில் Enterprise Servers, Storage மற்றும் Network Cabling தயாரிப்புகள் போன்றன உள்ளடங்கியுள்ளன. இந்த உடன்படிக்கை இலங்கை மற்றும் மாலைதீவுகள் சந்தைகளில் Axis இன் பிரசன்னத்தை உறுதி செய்துள்ளதுடன், பரந்தளவு Axis நெட்வேர்க் கமராக்கள் மற்றும் வீடியோ பொருட்கள் ஆகியவற்றை விநியோகிக்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு சந்தை என்பது மேம்படுத்தப்பட்ட சுபீட்சம், நகரமயமாக்கல் மற்றும் அதிகளவு பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படும் பொதுப் போக்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு சந்தை முன்னோக்கி கொண்டு செல்லப்படுகின்றது. தற்போது காணப்படும் analog surveillance systemகளிலிருந்து நெட்வேர்க் வீடியோ தீர்வுகளுக்கான தொழில்நுட்பப் புரட்சி காரணமாக இந்தத் துறையில் பெருமளவு வளர்ச்சி வாய்ப்புகள் காணப்படுவதாக Axis கண்டறிந்துள்ளது. 

Axis கொமியுனிகேஷன்ஸ் சார்க் மற்றும் இந்தியா ஸ்தாபனத்தின் முகாமையாளர் சுதிந்திர ஹொல்லா கருத்துத் தெரிவிக்கையில், 'TYAX (Private) Ltd என்பது வேகமாக வளர்ந்து வரும் விநியோகச் செயற்பாடுகளில் ஈடுபடும் நிறுவனமாகும். இது சிறந்த சந்தை அறிவு, அவற்றின் மாற்றங்கள் பற்றிய புரிந்துணர்வை கொண்டுள்ளது. TYAX (Private) Ltd இன் வலையமைப்பை இலங்கை மற்றும் மாலைதீவுகளின் Aயின் B, C மற்றும் D வகுப்பு நகரங்களில் காணப்படும் வாடிக்கையாளர்களுடன் ஒன்றிணைப்பதற்கும், அதன் மூலம் உறுதியான மற்றும் ஆழமான பிரசன்னத்தை குறித்த சந்தைகளில் பெற்றுக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவுகளில் பெருமளவு வாய்ப்புகள் காணப்படுவதை நாம் அறிகிறோம், இந்த பங்காண்மை மூலமாக இந்தச் சந்தைகளுக்கு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புத் தீர்வுகளை பரந்தளவு நாளிகை வலையமைப்பு மூலம் செலவுச்சிக்கனமான முறையில் பெற்றுக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

TYAX (Private) Ltd இன் விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளர் கயான் சேனாதீர கருத்துத் தெரிவிக்கையில், 'பாதுகாப்பு தீர்வுகள் பொருத்துகைகள் மற்றும் சுகாதார பராமரிப்பு, விருந்தோம்பல் மற்றும் பெருமளவு ஏனைய துறைகளில் தன்னியக்க அடிப்படையில் மேற்பார்வை தீர்வுகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இலங்கை மற்றும் மாலைதீவுகளில் பெருமளவு அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. எனவே, Axis தயாரிப்புகள் மற்றும் தீர்வுகள் போன்றன இந்த சந்தைகளுக்கான சிறந்த தீர்வுகளாக அமைந்துள்ளன. Axis உடனான எமது உறவு என்பதன் மூலம், எமது இலங்கை மற்றும் மாலைதீவுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு உயர் தரம் வாய்ந்த பொருட்கள் மற்றும் தீர்வுகளை பெற்றுக் கொடுக்கக்கூடியதாகவுள்ளது. பாதுகாப்பு தீர்வுகள் வழங்குநர் எனும் வகையில் Axis நிபுணத்துவத்துடன், TYAX (Private) Ltd இன் பரந்த நாளிகை வலையமைப்பு மற்றும் வாடிக்கையாளர் சென்றடைவ ஆகியவற்றின் மூலம் உறுதியான மற்றும் நேர்த்தியான பெறுபேறுகளை நீண்ட கால அடிப்படையில் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .