Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை
A.P.Mathan / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் மிகப் பெரிய இணையத்தள சந்தைப் பகுதியான ikman.lk அண்மையில் ikman delivers என்ற அதன் புதிய சேவையை ஆரம்பித்து வைத்துள்ளது. பொருட்களை வாங்கும் போதும், விற்கும் போதும், தனது வாடிக்கையாளர்களுக்கு மேலதிக சௌகரியங்களை வழங்கும் வகையில் இந்தப் புதிய சேவை அமைந்துள்ளது.
தற்போது ஒரு விசாலமான விற்பனையாளர்கள் தரப்பை சென்றடைய ikman.lk வழிவகுத்துள்ளது. இதன் மூலம் பரபரப்பின்றி பொருட்களை விற்பனை செய்யவும் முடியும். இதேவேளை, கொள்வனவாளர்கள் தாம் கொள்வனவு செய்யும் பொருட்களை தமது வீடுகளுக்கே தருவித்துக்கொள்ள முடியும். விற்பனையாளரும், கொள்வனவாளரும் அதற்கான ஏற்பாட்டை முன் கூட்டியே ikman.lk மூலம் செய்து கொள்ள வேண்டும். இந்த விநியோக சேவையை வழங்கும் பிரிவாகத்தான் ikman delivers செயற்படும். ஒரு கிலோவுக்கு 200 ரூபா என்ற மிகக் குறைந்த கட்டணத்தில் ikman delivers குறிப்பிட்ட பொருளை, குறிப்பிட்ட இடத்திலிருந்து எடுத்து உரிய இடத்தில் ஒப்படைக்கும். இந்தக் கட்டணத்தை யார் செலுத்துவது என்பதை இரு தரப்பினரும் பேசி தீர்மானித்துக் கொள்ளலாம். ஏனைய தரப்பு விநியோக சேவைகளைப் போலன்றி ikman.lk கொள்வனவாளரிடம் இருந்து உரிய பணத்தை வசூல் செய்து, விற்பனையாளரின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யும் பொறுப்பையும் ஏற்கும். கொள்வனவாளர் குறிப்பிட்ட பொருளை கொள்வனவு செய்ய முன்னர் அதனைப் பார்வையிட ஒரு வாய்ப்பும் வழங்கப்படும். இதன் மூலம் மோசடிகள் பெருமளவு தவிர்க்கப்படுகின்றன.
இந்தப் புதிய சேவையின் ஆரம்பம் பற்றி கருத்து வெளியிட்ட ikman.lk இன் வகைப்படுத்தல் முகாமைத்துவப் பிரிவின் மதிபீட்டாளர் சஞ்ஜய ஹெட்டிஆரச்சி 'மாதாந்தம் மூன்று மில்லியனுக்கும் அதிகமான அளவினர் விஜயம் செய்யும் இந்த இணையம், தொடர்ந்து ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்களில் ஈடுபட்டு வருவதில் முன்னணி வகிக்கின்றது. இலங்கையின் இணைய வழி சமூகத்துக்கு எமது அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை வழங்க தொடர்ந்து உறுதி பூண்டுள்ள அதேவேளை, ikman.lk யை தொடர்ந்தும் பரபர பற்ற, நம்பிக்கை மிகுந்த ஒரு சந்தைத் தளமாகப் பிரபல்யப்படுத்துவதே எமது குறிக்கோளாகும். இலங்கையில் உள்ள இந்த வகை சார்ந்த இணையத்தளங்களுள் நாம் புதிதாகத் தொடங்கியுள்ள விநியோகச் சேவையை வழங்கும் ஒரே இணையத்தளம் என்ற பெருமையும் தற்போது ikman.lk க்கு கிடைத்துள்ளது. இது கொள்வனவாளருக்கும் விற்பனையாளருக்கும் இடையில் காணப்படும் இடைவெளியையும் குறைக்கின்றது' என்றார்.
தற்போது கொழும்புக்கும் அதன் சுற்றுப் புறங்களுக்கும் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சேவையை விரைவில் நாடு முழுவதும் விஸ்தரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Apr 2021
17 Apr 2021
17 Apr 2021