2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

DSI விற்பனை முகவர்களுக்கு சொகுசு சுற்றுலா

Gavitha   / 2016 மே 17 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

DSI டயர் நிறுவனம் 2015ஆம் ஆண்டில் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்த Super Dealer - 2015 வர்த்தக ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 120க்கும் மேற்பட்ட விற்பனை முகவர்களுக்கு சிங்கப்பூரைச் சுற்றிப் பார்ப்பதற்கும் ஸ்டார் க்ரூஸ் சொகுசு கப்பலில் பயணிப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்ற DSI டயர் நிறுவனம் 2015ஆம் ஆண்டில் சிறந்த விற்பனை பிரதிநிதிகளை இலக்கு வைத்து Super Dealer - 2015 என்ற பெயரில் சிறப்பு ஊக்குவிப்புத் திட்டமொன்றை செயற்படுத்தியிருந்தது. DSI டயர் உற்பத்திகளை உரிய நேரத்துக்கு வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற தமது விற்பனை முகவர்களை ஊக்குவிப்பதும் பாராட்டி கௌரவிப்பதுமே இதன் அடிப்படை நோக்கமாகும்.

Super Dealer  2015 வர்த்தக ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் மேற்படி சுற்றுலாவில் பங்கு கொண்டவர்களுக்கு சிங்கப்பூரிலிருந்து மலாக்கா நகரம் வரை ஸ்டார் க்ரூஸ் கப்பலில் சென்று மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்புவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. முதற் தடவையாக இலங்கைக்கு வெளியே சொகுசு கப்பலொன்றில் வெளிநாட்டு நடனக் கலைஞர்களின் பங்கேற்புடன் விருது வழங்கும் விழாவொன்று நடாத்தப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். அதன் போது 120க்கும் மேற்பட்ட விற்பனை முகவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இச்சுற்றுலாவில் சம்சன் இறப்பர் கைத்தொழில் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரணதுங்க ராஜபக்ஷ உள்ளிட்ட பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கடந்த ஆண்டில் DSI டயர் நிறுவனம் Rewards Plus 2014 என்ற பெயரில் பிரம்மாண்டமான போட்டியொன்றை நடாத்தி 150க்கும் மேற்பட்ட விற்பனை முகவர்களுக்கு 04 நாள் மலேசிய சுற்றுலா பயண வாய்ப்பை வழங்கியது. 75 நாடுகளுக்கு மேல் DSI டயர்களை ஏற்றுமதி செய்யும் DSI டயரின் வெற்றிப் பயணத்தின் பெருமை மிக்க பங்குதாரர்களாக உள்ள விற்பனை முகவர்களை எதிர்காலத்திலும் உச்ச அளவில் பாராட்டி கௌரவிப்பதற்கு சம்சன் இறப்பர் கைத்தொழில் நிறுவனம் எதிர்பார்க்கின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X