2020 ஜூலை 15, புதன்கிழமை

HNB பினான்ஸ் இணையத்தளத்துக்கு தங்க விருது

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

HNB பினான்ஸ், அண்மையில் நடைபெற்ற BestWeb.lk -2019 விருது விழாவில் வங்கி, நிதிப் பிரிவில் சிறந்த இணையத்தளத்துக்கான தங்க விருதையும், சிறந்த இணைத்தயளத்துக்கான வெள்ளி விருதையும் வென்றுள்ளது.  

வங்கி மற்றும் நிதி பிரிவின் கீழ்ப் போட்டியிட்ட இலங்கையின் முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அனைத்தையும் பின்தள்ளிHNB பினான்ஸ் இன் www.hnbfinance.lkஇணையத்தளம் தங்க விருதை வென்றெடுத்தது. சிறந்த இணையத்தளத்துக்கான ஒட்டுமொத்த வெள்ளி விருதையும் வென்றெடுக்க HNB பினான்ஸ் ஆல் முடிந்தது. சிறந்த நிறுவன இணையத்தளம், தமிழ், சிங்கள,  ஆங்கில இணைத்தளம், சிறந்த ஈ- வர்த்தக மற்றும் அரச இணையத்தளம் போன்றவற்றுக்காக போட்டியிட்ட 400 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை பின்தள்ளியே இந்த வெற்றியை ஈட்டியுள்ளது.  

LK Domain Registry நிறுவனம் ஊடாக தொடர்ச்சியாக 9ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது விழாவில் உள்ளூர் நிறுவனங்களுக்கு ஒன்லைன் பாவனை ஊடாக தமது புத்தாக்க திறமைகள்,  ஆற்றல்களை வெளிப்படுத்தவும், அவற்றை மதிப்பிடவும் இதன்மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X