Editorial / 2020 ஜூன் 30 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
Hutch Telecommunications தனது பிரபலமான cliQ app இனை மேம்படுத்தி, மீள் அறிமுகம் செய்தமையின் மூலம், 078 மற்றும் 072 சந்தாதாரர்கள் தற்போது எல்லையற்ற இணையத்தை நாடு முழுவதும் கிடைக்கும் அதன் பாரியதும் மேம்பட்டதுமான 4G வலையமைப்பின் மூலம் அனுபவிக்கலாம் என Hutch அறிவித்துள்ளது.
072 சந்தாதாரர்கள் 2017ஆம் ஆண்டு முதல் Cliq 3G ஐ பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு Etisalat Sri Lanka நிறுவனத்தை Hutch கையகப்படுத்திய பின்னர், நாடு முழுவதும் 4G வலையமைப்பை ஸ்தாபித்தமையைத் தொடர்ந்து, புதிய Cliq app தற்போது 078, 072 இரண்டு சந்தாதாரர்களுக்கும் Cliq 4G ஐ வழங்கும் பொருட்டு Hutch இனால் வழி செய்யப்பட்டுள்ளது.
cliQ என்பது மொபைல் அப்ளிகேஷனாகும். இதன் மூலம் பயனர்கள் கால அடிப்படையிலான இணைய பெக்கேஜ்களை வசதியாகக் கொள்வனவு செய்ய முடிவதுடன், அவர்களின் திறன்பேசிகளில் எல்லையற்ற இணைய அனுபவத்தைப் பெற்று மகிழலாம்.
இது மெகாபைட், ஜிகாபைட் என்ற டேட்டா முறைகளைத் தவிர்த்து, கால அடிப்படையிலான தொகுதிகளாக இணைய அணுகலை வழங்குகின்றது. எனவே, பாவனையாளர்கள் மன அமைதியுடன், மீதமுள்ள டேட்டா மீதி தொடர்பில், எவ்வித கவலையுமின்றி இணையப் பாவனையில் ஈடுபடமுடியும்.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago