2020 மே 29, வெள்ளிக்கிழமை

LAUGFSஇன் LPG பரிமாற்ற முனைய தொழிற்பாடுகள் ஆரம்பம்

Editorial   / 2019 மே 08 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

LAUGFS Terminals Ltd நிறுவனம் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திலுள்ள தனது அதிநவீன LPG பரிமாற்ற முனையத்தின் தொழிற்பாடுகளை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துள்ளது. 

தெற்காசியாவிலேயே மிகப் பாரிய முனையமாக இது அமைந்துள்ளதுடன், LAUGFS Maritimeக்குச் சொந்தமான LPG கப்பல் தொகுதியில் இடம்பெற்றுள்ள, இலங்கைக் கொடியுடனான Gas Success என்ற கப்பல், முதலாவது LPG சரக்குத் தொகுதியுடன் வந்தடைந்துள்ளது. இப்புதிய LAUGFS LPG முனையமானது, இந்து சமுத்திரத்தில் முக்கியமானதொரு எரிசக்தி உட்கட்டமைப்பாகத் திகழ்வதுடன், மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் முக்கிய சர்வதேச கப்பற்பாதை வர்த்தக மார்க்கங்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தில் அமையப்பெற்றுள்ளது. 

முதலாவது LPG சரக்குக் கப்பலாக, LAUGFS Maritime இன் LPG கப்பலான Gas Success இன் வருகை வைபவ ரீதியாக இடம்பெற்றதுடன், LAUGFS நிறுவன பணிப்பாளர் சபைத் தலைவரான டபிள்யூ.கே.எச். வெகஹாபிட்டிய, LAUGFS குடும்பத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான திலக் டி சில்வா, Hambantota National Port Group பிரதம நிறைவேற்று அதிகாரியான றேய் றென் ஆகியோர் அதனை அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளனர்.

Hambantota International Port Service Co. Ltd இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான கப்டன் ரவி ஜெயவிக்கிரம, LAUGFS Maritime பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான லெஸ்லி ஹேமசந்திர, LAUGFS Terminals பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆனந்த பிரேமச்சந்திர மற்றும் பொது முகாமையாளரான ஹேஷான் டி சில்வா ஆகியோரும் இதில் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X