Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகளாவிய ரீதியில் வியாபாரச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கொவிட்-19 தொற்றுப் பரவல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரும்பாலும் சகல துறைகளும் சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளன.
நிதிச்சூழலில், ஊழியர்களைப் பாதுகாப்பாகப் பேணவும், வாடிக்கையாளர்களுக்கு வழமையான சேவைகளைப் புதிய வழிமுறைகளைப் பின்பற்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டியிருந்தது. ஊழியர்கள், வாடிக்கையாளர்களின் நலன்களைப் பேணுவதில், தனது செயற்பாடுகளை முடக்க நிலை அமலிலிருந்த காலப்பகுதியில், சிறந்த வகையில் முன்னெடுத்திருந்தது என்பதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
இலங்கையின் மாபெரும் ஆயுள் காப்புறுதிச் சேவை வழங்குநர் என்பதுடன், ஜோன் கீல்ஸ் குரூப்பின் பின்புலத்தில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொற்றுப் பரவல் காரணமாக எழுந்த சவால் நிலைகளுக்கு முகங்கொடுப்பதில் தனது நவீன தொழில்நுட்பம், பரிபூரண வாடிக்கையாளர் சென்றடைவு நிகழ்ச்சிகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வுத் திட்டங்களினூடாக பணியாற்றும் மாற்றியமைக்கப்பட்ட பணியாற்றல் சூழல் ஏற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தது.
பணியாற்றும் சூழலை மாற்றியமைத்துக் கொள்ள முடியாமை எனும் பிரச்சினைக்குப் பெருமளவான நிறுவனங்கள் முகங்கொடுத்திருந்தன.
யூனியன் அஷ்யூரன்சின் வியாபாரத் தொடர்ச்சித் திட்டம் என்பது, ஊழியர்களுக்கு வீடுகளிலிருந்தவாறு பணியாற்றுவதற்கு வசதியை ஏற்படுத்தியதுடன், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி, பணியாற்றும் சூழலை மாற்றியமைத்துக் கொண்ட ஒரு சில நிறுவனங்களில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸைத் திகழச் செய்தது. ஒன்லைனில் சந்திப்புகள், பயிற்சிகள் போன்றவற்றை முன்னெடுப்பதற்கு மாற்று முகாமைத்துவ செயன்முறைகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், வெளியக சூழலால் எழக்கூடிய தடங்கல்களைத் தவிர்த்துக் கொள்ளக்கூடியதாகவும் அமைந்திருந்தது.
சூழலில் நிலவிய உறுதியற்ற நிலை காரணமாக, டிஜிட்டல் மாற்றியமைப்புச் செயன்முறையைத் துரிதமாகப் பின்பற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது.
நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை வெளிக்கொணரும் வகையிலும், முகவர், வாடிக்கையாளர்கள் மத்தியில் செயற்பாட்டு மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் வர்த்தக செயற்பாடுகளைத் தன்னியக்க மயப்படுத்தும் நடவடிக்கைகளை யூனியன் அஷ்யூரன்ஸ் மேற்கொண்ட வண்ணமிருந்தது. விற்பனைச் செயன்முறைகளுக்கு வினைதிறனைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய அனுகூலங்கள், வெகுமதிகள் ஆகியன ஒன்றிணைக்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகள் இதில் ஒன்றாகும்.
ஏனைய செயற்பாடுகளில் விற்பனை நடவடிக்கைகளை ஊக்குவித்தல், ஊழியர் செயற்பாடுகள், வருமானமீட்டல் செயற்பாடுகள் ஆகியவற்றை டிஜிட்டல் கட்டமைப்புகளினூடாக ஊக்குவித்தல், பயிற்சி இடைவெளிகளை நிவர்த்தி செய்தல், ஒட்டுமொத்த வினைதிறனைக் கண்காணித்தல், விற்பனைச் செயலணிக்கு வாடிக்கையாளர் ஈடுபாடு தொடர்பான பரிபூரண பயிற்சிகளைப் பெற்றுக் கொடுத்தல் போன்றன இதில் அடங்கியுள்ளன.
17 minute ago
24 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
24 minute ago
52 minute ago