2021 ஜனவரி 27, புதன்கிழமை

சிறுவனை தூக்கிச்செல்ல முயன்ற கழுகு

George   / 2016 ஜூலை 13 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் அலைஸ் ஸ்பிரிங்ஸ் டெசர்ட் பூங்காவில் பிரபலமான விலங்குகள் காட்சி நிகழ்ச்சியில் பார்வையாளராக வந்த ஒரு சிறுவனை இராட்சத கழுகுச் தூக்கிச் செல்ல முயற்சித்தமை பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

உணவுக்காக ஒரு சிறு விலங்கை தூக்கிச் செல்வது போல அந்தச் சிறுவனைத் தூக்கிச்  செல்ல அக்கழுகு முயன்றுள்ளது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, சிறுவனின் மேல் உடையைக் கவ்வித் தூக்கிச் செல்ல கழுகு முயன்றது. 

எனினும், கூடியிருந்தவர்களின் கூச்சல் அதிகமானதால் சிறுவனை விட்டுவிட்டு கழுகு பறந்து விட்டது. இதனால் அச் சிறுவன் சிறு காயத்தோடு மீட்கப்பட்டான்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .