2021 மார்ச் 01, திங்கட்கிழமை

13 காதலர்களுடனான அனுபவங்களை அம்பலமாக்கி, அவமானத்துக்குள்ளான மாணவி

Kogilavani   / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவின் டியூக் பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடன் உறவுக்கொண்ட 13 ஆண்களுடனான அனுபவங்களை 'பவர் பொயின்ட்' மூலம் விபரித்து, அதை சக மாணவிகளுக்கு அனுப்பியபின் அது தற்போது இணையத்தளத்தில் வெளியாகி லட்சக்கணக்கானோரின் பார்வைக்குச் சென்றதால் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

வடகரொலினா மாநிலத்திலுள்ள இப்பல்லைக்கழகத்தைச் சேர்ந்த 22 வயதான ம கரென் ஒவென் எனும் மாணவியே இவ்வாறு தன்னுடன் உறவுகொண்ட ஆண்களின் விபரங்களை பகிரப்படுத்தியுள்ளதாக டெய்லி டெலிகிரப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் அவர் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்தபின் தனது நெருங்கிய தோழிகள் மூவருக்கு வேடிக்கைக்காக அனுப்புவதற்கு இந்த பவர் பொயின்ட் தகவல் தொகுப்பை அவள்  தயாரித்துள்ளார்.

ஆனால் அத்தகவல் தொகுப்பு பல்கலைகழகத்தில் உள்ள 14,000 மாணவர்களின் பார்வைக்குச் சென்றதுடன் இணையத்தளத்திலும் வெளியாகியுள்ளது.

42 பக்கங்களைக்கொண்ட  தகவல் தொகுப்பை செய்து அதற்கு 'வகுப்பறைக்கு வெளியேயான கற்றல் நடிவடிக்கை' என கரென் ஒவென் தலைப்பிட்டுள்ளார்.

கனெக்டிகட்டைச் சேர்ந்த ஓவென் எனப்படும் இப்பெண், தனது காதலர்கள் எப்படி சந்தித்தார்கள், அவர்கள் மதுபான விடுதிகளில் மது அருந்தியபின் என்ன செய்தார்கள் என்பதை விளக்கியுள்ளார்.

அவர் 13 காதலர்களது பெயர்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அவள் அவர்களது பாலியல் நடத்தைகளின் சாதக பாதகங்களை விபரித்துள்ளதுடன் காதலர்களை அவர்களின் பாலியல் ஆற்றல் அடிப்படையில் தரப்படுத்தியுமுள்ளார்.

ஆனால், இப்போது இந்த செயற்பாடுகளுக்காக தான் மிகவும் வருந்துவதாக கரென் ஒவென் கூறியுள்ளார். 'நான் ஒருபோதும் இந்த மக்கள் மனதை புண்படுத்த எண்ணவில்லை' என்கிறார் அவர்.
 

 


  Comments - 0

 • leonard Friday, 15 October 2010 03:52 AM

  நல்ல படம் அந்த 13 காதலருக்கு!

  Reply : 0       0

  mani97905717 Saturday, 28 May 2011 03:58 PM

  i am miss that list

  Reply : 0       0

  xlntgson Wednesday, 13 October 2010 09:44 PM

  extra curricular activity .நல்ல கற்கைக்கு வெளியேயான பாடம்தான், போங்கள்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .