2021 ஜனவரி 16, சனிக்கிழமை

2 மூக்குடன் பன்றிக்குட்டி

Menaka Mookandi   / 2014 ஜூலை 03 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


விலங்கினங்களிலேயே வித்தியாசமான மூக்கைக் கொண்டமைந்த உயிரினமான பன்றி, இரண்டு மூக்குகளை கொண்ட பன்றிக்குட்டியொன்றை ஈன்றுள்ளது.

தாய்வானில் உள்ள யன்லின் எனும் நகரில் பண்ணைத்தொழில் செய்யும் ஹவ் என்பருடைய பன்றியே இவ்வாறானதொரு அதிசயக் குட்டியொன்றை ஈன்றுள்ளது.
இரண்டே பவுண்ட் நிறையுடைய இப்பன்றிக்குட்டி தன்னுடன் பிறந்த மற்றைய பன்றிக்குட்டியை விட மிகவும் சிறியதாக காணப்படுகின்றது.
 
இரண்டு மூக்கை கொண்டுள்ளதால் இதனால் தானாகவே தாய்ப்பாலை குடிக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட பாலை மாத்திரமே இதற்கு வழங்கக்கூடியதாக இருப்பதாகவும் அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இப்பன்றியை பொது மக்களின் பார்வைக்காக வைக்கவேண்டும் என்பதற்காக வேறொரு பண்ணையாளருக்கு தற்போதுள்ள உரிமையாளர் விற்பனை செய்துள்ளாராம்.

'எனது மனைவியே இந்த பன்றிக்குட்டிக்கு எவ்வாறு பாலூட்டுவது என்பதை கண்டறிந்து கொண்டார். இதனது இரண்டு மூக்குகளும் நன்றாக செயற்படுகின்றது. இப்பன்றிக்குட்டி நீண்டநாள் வாழுமாயின் இதனை பொது மக்களின் பார்வைக்காக வைக்க வேண்டும் என்பதினால் இதனை விற்பனை செய்துள்ளேன்' என்று இப்பன்றிகுட்டியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

என்னால் முடிந்த வரை இப்பன்றிகுட்டியை உயிருடன் வைத்திருப்பதற்கு வேண்டிய சிகிச்சைகளை பெற்றுக்கொடுப்பேன் என்று பன்றிக்குட்டியை வாங்கியுள்ள புது உரிமையாளரும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .