2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மிகப்பெரிய மார்பகங்கள் நீக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஆண்

Super User   / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகிலேயே மிகப்பெரிய மார்பகங்களுடன் காணப்பட்ட  சீனாவைச் சேர்ந்த ஆணொருவர் சத்திர சிகிச்சைசெய்து  மார்பகங்களை நீக்கியப்பின் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.

சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் ஜீயூயிங் கிராமத்ததைச் சேர்ந்த குவோ கிங்போ (வயது 53) என்பவருக்கே இவ்வாறான பருத்த மார்பகங்கள் காணப்பட்டன. சத்திர சிகிச்சை செய்து அவற்றை அகற்றியதன் மூலம் பத்து வருட  தொந்தரவு  முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என அவர்   தெரிவித்துள்ளார்.

பத்து வருடங்களுக்கு முன்பு  மற்ற ஆண்களின் மார்பகங்களைவிட எனது மார்பகங்கள் வளர்ச்சியடைவதை அவதானித்தேன். ஆனால் எனது உடல் அதிகமாக தடிப்பதாக நினைத்துக்கொண்டேன்.  ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது மார்பகங்கள் அளவுக்கதிகமாக வளர்ச்சியடைந்து வருவதை அவதானித்தேன். நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னை உற்றுப் பார்த்தனர். எனது மனைவியிடமும் சிலர் அபத்தமான கேள்விகளை கேட்டனர்" என குவோ கிங்போ கூறியுள்ளார்.


அவர் அந்நாட்டின் பல்வேறு நகரங்களிலுள்ள பல வைத்தியசாலைகளுக்குச் சென்றார். ஆனால் எந்த வைத்தியசாலையிலும் அவருக்கு சிகிச்சையளிக்க முடியவில்லை. இறுதியாக அவர் ஜினான் வில்லிங் நகரிலுள்ள மார்பக வைத்தியசாலையை தேடிப்பிடித்தார். அந்த வைத்தியசாலை கிங்போவுக்கு உதவுவதற்கு முன் வந்தது.

வைத்தியர் ஸாங் ஜியான்ஹூவா இது குறித்து கூறுகையில், "நான் எனது 40 வருடகால சேவையில் இதைப்போன்ற விசித்திர சம்பவத்தை பார்க்கவில்லை. ஒருபோதும் இதைப்போன்ற ஒரு விடயம் சீனாவிலோ ஏன் உலகில் கூட இடம்பெறவில்லை" என்றார்.

டாக்டர் ஜியான்ஹூவா  8 வைத்திய நிறுவனங்களில் பணிபுரியும் 20 மருத்துவ நிபுணர்களை வரவழைத்து குவா கிங்போவின் பருத்த மார்பங்களை எவ்வாறு சத்திரசிகிச்சை செய்யலாம் என்பது பற்றிய திட்டத்தை வகுத்தார்.

சத்திரசிகிச்சை நேரத்தைக் குறைப்பதற்காக  இரண்டு மருத்துவக் குழுக்கள் இருபக்கங்களிலும்  இருந்து பணியில் ஈடுப்பட்டன. இரு குழுக்களும் தலா ஒரு மார்பகத்தை அகற்றினர். இச்சத்திர சிகிச்சை 6 மணித்தியாலங்கள் நீடித்தன.

சிகிச்சை முடிந்து ஒரு மாத்தின் பின்பு குவோ கிங்போ வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார். அவர் தற்போது தன்னை ஒரு புதிய ஆண் மகனாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.

மீண்டும் தன்னை மற்றவர்கள்  பெண் அங்கம் கொண்ட ஆண் என்று குறிப்பிடுவார்கள் என்ற அச்சமில்லை என்கிறார் குவோ கிங்போ.

அவர் உடலில் அதிக கொழுப்பு விநியோகத்தைத் தூண்டும் 'லிபோடிஸ்ட்ரபி சின்ட்ரம்' நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--