Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்மேனியா நாட்டின் மிகப்பெரிய சொக்கலேட் தயாரிப்பு நிறுவனமான 'கிரான்ட் கன்டி' நிறுவனம், தனது 10ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு உலகிலேயே மிகவும் பிரமாண்டமாக சொக்கலேட்டினை தயாரித்திருக்கிறது. 4,410 கிலோகிராம் நிறையுடைய இந்த 'சொக்கலேட் பார்' ஆனாது 25 சென்ரிமீற்றர் தடிப்பம் கொண்டது. இந்த சொக்கலேட் பாரானது 5.6 மீற்றர் நீளமும் 2.75 மீற்றர் அகலமும் கொண்டது.
70 வீதம் சொக்கலேட்டினால் தயாராகிய இதனை, தனது வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளதாக இந்தக் கம்பனியில் பிரதம நிறைவேற்று அதிகாரி கரேன் வர்டானியன் தெரிவித்துள்ளார்.
ஆர்மேனியாவின் தலைநகர் ஜெரேவானில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த மிகப்பெரிய சொக்கலேட்டிற்கு 'உலகின் மிகப்பெரிய சொக்கலேட் தயாரிப்பு' என்ற அங்கிகாரத்தினை, கின்னஸ் உலக சாதனை பதிவாளர்களின் பிரதிநிதி எலிசபெத் ஸ்மித் வழங்கினார்.
2007ஆம் ஆண்டு இத்தாலியில் தயாரிக்கப்பட்ட 3580 கிலோகிராம் நிறையுடைய சொக்கலேட்டே இதுவரை மிகப்பெரிய சொக்கலேட் தயாரிப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
5 hours ago
naisarhm Tuesday, 14 September 2010 07:16 PM
ippatium oru sataniya?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago