2025 ஒக்டோபர் 30, வியாழக்கிழமை

கஞ்சா செய்கை சுற்றிவளைப்பு

Freelancer   / 2025 ஒக்டோபர் 30 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனமல்வில - நிகவெவ பகுதியில் நேற்று கஞ்சா செய்கையை சுற்றிவளைத்ததில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா செடிகள் மற்றும் 128 கிலோகிராம் உலர்ந்த கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் எம்பிலிப்பிட்டிய மற்றும் மித்தெனிய பகுதிகளை சேர்ந்த 38, 52 மற்றும் 61 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பல்வேறு அளவுகள் மற்றும் உயரங்களைக் கொண்ட பல கஞ்சா செடிகள் மாதிரிகளாக எடுக்கப்பட்டுள்ளதுடன், மீதமுள்ளவை சம்பவ இடத்திலேயே அழிக்கப்பட்டுள்ளன.

தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X