R.Tharaniya / 2025 ஒக்டோபர் 30 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தறை, மிரிஸ்ஸ கடல் பகுதியில் மூழ்கிக் கொண்டிருந்த நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை (28) அன்று கடலோரப் பகுதியில் உயிர்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை கடலோர காவல் படையின் உயிர்காப்பாளர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த போது,கடற்கரையில் பணியில் இருந்த உயிர் காப்பாளர்கள் நான்கு பேர் நீரில் மூழ்குவதை கவனித்து, உடனடியாக அவர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
மேலும், மீட்கப்பட்ட வெளிநாட்டினர் 13 முதல் 55 வயதுக்குட்பட்ட இரண்டு ரஷ்ய பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


எம்.யூ.எம்.சனூன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .