Janu / 2025 ஒக்டோபர் 30 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளையாட்டு பயிற்சிகளுக்கிடையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரின் மார்பகங்களை பிடித்து தள்ளிவிட்ட ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (28) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றின் விளையாட்டு துறை ஆசிரியரான 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபையின் தகவலுக்கமைய மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், பாதிக்கப்பட்ட மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .