2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

ஐரோப்பாவை திணறடிக்கும் காதலர்களின் காதல் பூட்டுகள்

Kogilavani   / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

altஐரோப்பாவின் சில நாடுகளில் காதலர்கள் தமது காதலை பகிரங்கமாக வெளிப்படுத்துவதற்கு வித்தியாசமான உத்தியொன்றை  கையாண்டு வருகின்றனர்.

alt

இரும்புப் பூட்டுகளில் தமது பெயர்களை பொறித்து அவற்றை பகிரங்க இடங்களில் பூட்டிவிட்டு சாவியை எறிந்து விடுகின்றனராம்.

தமது காதலை ' உடைக்க முடியாது' என்பதை இதன் மூலம் அவர்கள் வெளிப்படுத்துகிறார்களாம்.

முதன் முதலில் 1980களில் ஹங்கேரி நாட்டில்,  இந்த வழக்கம் ஆரம்பாகியது. தற்போது பிரிட்டன் போன்ற நாடுகளிலும் இது அறிமுகமாகியுள்ளது.

லண்டன் டவர் பிரிட்ஜின் ஒரு பகுதி தற்போது பூட்டுகளால் மறைக்கப்பட்டுள்ளது.

சில காதலர்கள் தமது காதலர்களுக்கான கடிதங்கள் தகவல்களையும் பூட்டுகளில் பொறித்துள்ளனராம்.

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் உள்ள மரமமொன்று பூட்டுகளால் சுற்றி மூடப்பட்டுள்ளது. பாரிஸ் நகரில் டெஸ் ஆர்ட்ஸ் பாலத்தில் இத்தகைய பூட்டுகள் அதிகமாக தொங்கவிடப்பட்டுக் காணப்படுவதால் அதிக பாரத்துடன் காணப்படுகிறது.

alt

இதனால் அங்கு பூட்டுகளைத் தொங்கவிடுவதை அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.

லத்வியாவின் ரிகா மற்றும் ஜேர்மனியின் கொலோன்ஜ் நகரிலும் பாலங்கள் இத்தகைய பூட்டுகளால் நிரம்பியுள்ளன.

காதல் பித்தினால் இப்படி பூட்டுகளில் பெயர்களை பொறித்துப்பூட்டிவிட்டு, காதல் முறிந்தபின் அதற்காக வருந்தும் நபர்கள் எத்தனையோ?


  Comments - 0

 • anniya Wednesday, 22 September 2010 07:20 PM

  கன்ட்ரி ப்ளூட்

  Reply : 0       0

  xlntgson Sunday, 26 September 2010 09:54 PM

  இங்கே காதலை கழிப்பறை சுவரில் கூட எழுதி வைக்க முடியாது, அதற்கும் தடை. பத்திரிகைகள் வரும் முன், சுவரில் தான் செய்திகளை எழுதினார்கள் .அமெ. வால் ஸ்ட்ரீட் பிரபல்யமான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உருவாக காரணம். கம்யூ. ரஷ்யாவிலும் செய்தி தடை இருந்தபோது சுவர்களில் எதிர்ப்புகள் எழுதி வைக்கப்பட்டன. இப்போது இணையம் போன்ற வசதிகள் இருந்தாலும் தணிக்கை உண்டு. சுவரில் எழுத தடை எதுவும் இல்லை. ஆனால் வேலை இல்லாதவர்கள் தான் எழுதுவார்கள், பார்ப்பார்கள் இப்போது அதையும் செய்ய இயலாது, பைத்தியங்கள் கூடும். நான் சிறுவனாக ரசித்தவை!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--