2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

பிரித்தானிய மகாராணியின் உள்ளாடை ஏலத்தில் விற்பனை

Super User   / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிஸபெத்துக்கு 40 வருடங்களுக்குமுன் சொந்தமானதாக இருந்த உள்ளாடையொன்று ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.


1968 ஆம் ஆண்டு சிலி நாட்டுக்கு எலிஸபெத் மகாராணியார் விஜயம் செய்தபோது பிரத்தியேக விமானத்தில் அவர் விட்டுச்சென்ற உள்ளாடை இதுவெனக் கூறப்படுகிறது.


இந்த உள்ளாடையில் மகாராணியாரின் முதலெழுத்தான 'E' பொறிக்கப்பட்டுள்ளது. பிரபல பிளே போய்களில் ஒருவரான ஜோசப் டி பிக்ஸ்க் டொப்ரோனி என்பவருக்கு 40 வருடங்களுக்கு முன் சில நண்பர்களால் இந்த உள்ளாடை வழங்கப்பட்டதாம்.


எனினும் இந்த உள்ளாடையை இரண்டாம் எலிஸபெத் மகாராணியார் எப்போதாவது அணிந்தாரா என்பது தெரியவில்லை.
 

கடந்த ஜூன் மாதம் டொப்ரோனி இறந்ததையடுத்து அவர் சேகரித்து வைத்திருந்த பொருட்களுடன் இந்த உள்ளாடையையும் அமெரிக்க ஏலவிற்பனை நிறுவனமொன்று  ஏலத்தில் விற்பனை செய்யவுள்ளது.
 

பிரிட்டனின் மற்றொரு புகழ்பெற்ற அரசியான விக்டோரியா மகாராணியார் பயன்படுத்திய உள்ளாடையொன்று 2008 ஆம் ஆண்டு 9000 டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் எலிஸபெத் மகாராணியாரின் உள்ளாடையும் இதே தொகைக்கு விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


  Comments - 0

 • tamilsalafi.edicypages.com Monday, 13 December 2010 05:03 PM

  வெட்கம் என்ன விலை ?? வெட்கம் இல்லை என்றால் எதுவும் செய்வான் !!

  Reply : 0       0

  Janan Monday, 13 December 2010 08:11 PM

  அட கடவுளே ! இதெல்லாம் இவங்களுக்கே over ஆக விளங்கல்லையா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--