2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

நிர்வாண உடல் மூலம் நிலத்தோற்றங்கள்

Kogilavani   / 2011 மார்ச் 02 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்த நிலத்தோற்றக் காட்சிகளை பார்க்கும்போது பலரும் அவை உண்மையாக உள்ளதென எண்ணக்கூடும். ஆனால்,  மிகவும் கூர்ந்து கவனித்தால்தான் அது தவறெனத் தெரியும்.

ஆம், இந்த காட்சிகள் உண்மையில் நிர்வாணமான உடல்களின் மூலம்  உருவாக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த கலைஞர் அலன் டேகர் என்பவர் நிர்வான மொடல்களை பயன்படுத்தி  டஸன் கணக்கிலான நிலத்தோற்ற ஓவியங்களை  நுட்பமாக  வரைந்துள்ளார்.  கடந்த 35 வருடங்களாக அவர் இதில் ஈடுபட்டுள்ளார்.

இவை எண்ணப்பாடுகள் மற்றும் உண்மைத்தன்மை தொடர்பானவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

உடலை மையப்படுத்திய இந்த செயற்திட்டமானது யதார்த்தம் தொடர்பாக மக்களது மனதில் ஏற்படும் எண்ணத் தோற்றங்களுக்கு சவாலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என அலன் டேகர் கூறுகிறார். அத்துடன் ஒரு சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட யதார்ததங்கள் இருக்க முடியும் என்பதை இவை வெளிப்படுத்துகின்றன என்கிறார் அவர்.

தான், பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் உளவியல் கற்பித்தபோது இவ்வாறான ஓவியங்களை வரையவேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டதென்று அலன் டேகர் தெரிவிக்கின்றார்.

' இப்படங்களை பார்ப்பவர்களுக்கு முதலில் அது இயற்கை நிலத்தோற்றம் போல் தெரியவேண்டும்.  இரண்டாவது தடவை பார்க்கும்போதுதான் அவர்களுக்கு மனிதன் என்று தென்படும்.

நான் ஒரு போதும் உடல்கள் குறித்து எண்ணவில்லை. ஒருவரின் மனதில் ஏற்படும் குழப்பங்களில்தான் நான் ஆர்வம் கொண்டுள்ளேன். ஆரம்பத்தில் எனது ஓவியங்களுக்கு நிர்வாண உடல்களை பயன்படுத்துவதை பலர் நிராகரித்தார்கள். ஆனால் காலப்போக்கில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.


 


  Comments - 0

 • M.J. SYED ABDULRAHMAN Tuesday, 31 May 2011 08:56 PM

  எஸ்
  அண்டம் பிண்டம்
  உண்மை
  தாங்க் யு

  Reply : 0       0

  Menu Thursday, 03 March 2011 07:50 PM

  பெண்களின் தொப்புள்களில் பம்பரம் விட்டாச்சு, ஒம்லட் போட்டாச்சு, இப்போ குளம் கட்டி மீனும் பிடிக்க தொடங்கி விட்டாங்க போல.........!
  இதுவே ஆண்களின் தொப்புள்களில் கையை வச்சா சும்மா விட்டிடுவாங்களா என்ன?

  Reply : 0       0

  xlntgson Thursday, 03 March 2011 08:25 PM

  "கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும், நீ காணும் தோற்றம், மெய்யே இல்லாதது"

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--