2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பயணிகளின் பொருட்களை திருடுவதற்காக பயணப்பெட்டிக்குள் ஒளிந்திருந்த திருடன்

Kogilavani   / 2011 ஜூன் 08 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விமான நிலையத்திலிருந்து செல்லும் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளின் விலை உயர்ந்த பொருட்களை திருடுவதற்காக  திருடனொருவன்  பயணப்பெட்டி ஒன்றுக்குள் ஒளிந்திருந்த  சம்பவம் ஸ்பெய்னில் நடைபெற்றுள்ளது.

கிரினா விமான நிலையத்திலிருந்து பார்ஸிலோனா நகருக்குச் செல்லும் பஸ் ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஸ்பானிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபருக்கு மற்றொருவர் உதவியாக இருந்துள்ளார். இவர்களின் திட்டத்தின்படி, குறித்தத் திருடன் பெரிய பயணப் பெட்டிக்குள் தன்னை நுழைந்துகொள்ள அந்தப் பெட்டியுடன் செல்லும் மற்றைய நபர் பயணச்சீட்டை பெற்று, பஸ்ஸில் பயணம் செய்வார். அவரின் பெட்டி வழக்கம்போல் பஸ்ஸில் பொதிகளை வைக்கும் பகுதிக்குள் ஏற்றப்படும்.

அதன்பின் அப்பெட்டியிலிருந்து வெளிவரும் திருடன், ஏனைய பைகள், பெட்டிகளிலுள்ள விலை உயர்ந்த பொருட்களை திருடுவான். 90 நிமிட பயணத்தின் இறுதியில் குறித்த பெட்டிக்குள் திருடன் மீண்டும் நுழைந்துகொள்ள அவரின் நண்பர் பஸ்ஸிலிருந்து இறங்கி அப்பெட்டியை பெற்றுகொள்வார்.

ஆனால் அடிக்கடி மர்மமாக பொருட்கள் காணாமல் போவதாக பயணிகள் செய்திருந்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மிக விழிப்பாக இருந்தனர். இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி பொலிஸார்  சந்தேகத்திற்கிடமான பெட்டியொன்றை சோதனையிட்டபோது அதற்குள் ஒருவர் மறைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன்போது இந்த நூதனமான திருட்டுத்திட்டம் அம்பலமாகியது.  பின்னர் இரு நபர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.
பெட்டிக்குள்ளிருந்த நபரிடமிருந்து பல தொலைபேசி, பெட்டிகளை திறக்கக்கூடிய ஆயுதங்கள் முதலானவை கைப்பற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .