2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

செங்குத்தான மலையில் பாதை அமைக்கும் ஊழியர்கள்

Kogilavani   / 2011 ஜூன் 22 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவிலுள்ள பல்லாயிரம் அடி உயரமான  மலையின் செங்குத்தான பகுதியில் 3 அடி அகலமான மரத்திலான பாதையொன்றினை அமைக்கும் பணியில் பலர் ஈடுபட்டு  வருகின்றனர். இந்நடவடிக்கையானது பார்ப்பவர்களை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதாகவுள்ளது.

உலகின் மிக அபாயகரமான தொழில்களில் ஒன்றாக இவர்களின் தொழில் இருக்கலாம் என கருதப்படுகிறது.

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் சிபோ மலைத்தொடரிலேயே மேற்படி பாதை அமைக்கப்படுகிறது. அம் மலையின் 90 பாகை செங்;குத்தான பகுதியில் நின்று மேற்படி பாதையை இந்த ஊழியர்கள் அமைத்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியை இவர்கள் நிறைவு செய்துள்ளனர்.

எவ்வித தடுப்புகளோ பாதுகாப்பு வலைகளோ இல்லாத நிலையில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சற்று பிசகினாலும் பல்லாயிரம் அடி பள்ளத்தில் விழுந்து மரணம் நேரிடுவது நி;ச்சயம். ஆனால் துணிச்சலுடன் தமது வேலையை தொடர்ந்து வருகின்றனர் இவ்வூழியர்கள்.

1.8 மைல்கள் நீளத்தில் மேற்படி பாதை அமைக்கப்படவுள்ளது. இப்பாதை பூர்த்தியாக்கப்பட்ட பின்னர் அப்பிரதேசத்தின் அரிய இயற்கைக் காட்சிகளை கண்டுகளிப்பதற்கு பலர் அங்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0

 • rogini Thursday, 23 June 2011 01:20 AM

  எதற்கு இந்த விபரீத ஆசை?

  Reply : 0       0

  Nesan Thursday, 23 June 2011 01:58 AM

  ஆபத்தான பணிதான். இந்த பாதை பூர்த்தியானவுடன் எப்படி இதை அமைத்திருப்பார்கள் என வியந்துகொண்டே பலரும் அங்கு இயற்கையை ரசிக்க வருவர். அவ்வூழியர்களின் அர்ப்பணிப்பு பாராட்டப்பட வேண்டும்.

  Reply : 0       0

  Fahim Thursday, 23 June 2011 01:15 PM

  உண்மையில் ஊழியர்களின் அர்ப்பணிப்புத்தான். எனினும், அவர்களின் உயிருடன் விளையாடுவது நிறுத்தப்பட வேண்டும்.

  Reply : 0       0

  bis Thursday, 23 June 2011 02:23 PM

  சீனர்களின் மந்திரம், தலைபோனாலும் 'நோ புறப்ளம்'. நான் நேரடி அனுபவத்தில் கண்டது.

  Reply : 0       0

  sathik Thursday, 23 June 2011 09:28 PM

  இது மாதிரி எத்தனை பாலம் அமைத்தாலும் கடைசியில் கெட்டே பேருதான் வரும். பொறுத்து இருந்து பாருங்கள்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .