2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

பரசூட்டில் அலுவலகம் செல்லும் சீனர்

Kogilavani   / 2012 நவம்பர் 17 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதிகளில் வகை வகையான வாகனங்கள் செல்கையில் பொது போக்குவரத்து பஸ்களும் வீதிகளில் பயணிக்கையில் சீனாவை சேரந்த ஒருவர் பரசூட் மார்க்கத்தை பயன்படுத்தி வருகின்றமை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

போக்குவரத்து நெறிசலை தவிர்த்துக்கொள்ளவும் அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்கு செல்வதற்காகவும் சீனர் ஒருவர் பரசூட் மார்க்கத்தை பயன்படுத்தி வருகின்றார்.

சீனரான செங் டெக்ஸியா என்பவரே இத்தகைய விபரீத போக்குவரத்தை மார்க்கத்தை கடைபிடித்து வருகிறார்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக இவர் அலுவலகத்திற்கு செல்வதற்காக தினமும் 3 மணித்தியாலங்களை வீதியிலேயே செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய நேரம் அநியாயமாக செலவாவதை தடுப்பதற்கும் அலுவலகத்திற்கு இலகுவில் செல்வதற்கான வழிமுறையாக பரசூட் மார்க்கத்தை கடைப்பிடித்துள்ளதுடன் பரசூட்டில் பறப்பதற்கான பயிற்சியையும் எடுத்துகொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

தொழில்புரியும் நான் நகரின் பல்வேறு முனைகளுக்கும் பயணிக்கின்றேன். இதனால், பல மணித்தியாலங்களை போக்குவரத்து நெறிசலின்போது வீணாக செலவிட நேரிடுகின்றது.

வாகன நெறிசல் மிக்க சாலையின் மேலே என்னால் இப்போது இலகுவாக பயணிக்க முடிகின்றது. பரசூட் மூலம் அலுவலகம் செல்வதற்கு சில நிமிடங்களே எடுக்கின்றன. இங்கு போக்குவரத்து நெறிசல் அதிகமாக காணபடுகின்றமையினால் என்னைப் போல பலரும்; இந்த போக்குவரத்து மார்க்கத்தையே  கடைபிடித்து வருகின்றனர் என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .