2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

கவர்ச்சிமிக்க நாட்காட்டியை வெளியிட்ட விமான நிறுவனத்திற்கு கண்டனம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொடல் அழகிகளை கொண்டு கவர்ச்சியாக தயாரிக்கப்பட்ட நாட்டிகாட்டியை வெளியிட்டதால் பட்ஜட் விமான நிறுவனமொன்று தாய்லாந்து அரசின் கண்டனத்துக்குள்ளகியுள்ளது. 

குறைந்த விலையில் பயணிகளை ஏற்றிச்செல்லும் நொக் எயார்லைன் விமான நிறுவனமே இவ்வாறு மொடல் அழகிகளை கொண்ட நாட்காட்டியை வெளியிட்டுள்ளது.

இந்நாட்காட்டியில் 12 மொடல் அழகிகள், குறித்த விமான நிறுவனத்திற்குரிய நிறத்தில் பிகினி ஆடைகளை அணிந்த நிலையில் வெவ்வேறான கோலத்தில் புகைப்படங்களுக்கு காட்சியளித்துள்ளனர்.

இந்நிலையில் இந்நிறுவனம் கலாசாரத்தை மீறியுள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் கண்டித்துள்ளது.

'சில நிறுவனங்கள் பெண்களின் உடல்களை விளம்பர பொருளாக பயன்படுத்துவதை நிறுத்த மறுப்பதற்கு இதுபோன்ற நாட்காட்டிகள் சிறந்த உதாரணமாகும்' என தாய் அரசாங்கம் கூறியுள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

'சமூக, கலாசார பொறுப்புணர்வு இல்லாமல் அவர்கள் நடந்துகொள்கின்றனர். அவர்கள் இவற்றினை அலட்சியம் செய்து தாக்கங்களை ஏற்படுத்துகின்றனர். விசேடமாக பெண்களின் கௌரவங்களில் அவர்கள் தாக்கங்களை ஏற்படுத்துகின்றனர்' என நிரந்தர செயலாளர் பிரசன்ன பொங்டபிடிகல் தெரிவித்துள்ளார்.

விமான வணிகமானது எப்போதும் கவர்ச்சிமிக்கதாகவே காணப்படுவதாக நொக் விமான நிலைய பிரதம அதிகாரி பாடி சரசின் தெரிவித்துள்ளார்.

'நாங்கள் கலாசாரத்தை புரிந்துகொள்கிறோம். அரசாங்கத்தின் எதிர்வினையானது ஆச்சர்யத்திற்குரியதல்ல. நாங்கள் எல்லையை மீறவில்லை என நம்புகிறோம்.  அதிகமானவர்கள் அந்த நாட்காட்டியை விரும்புகின்றனர். நாட்டிககாட்டி வேண்டுமென கூறியுள்ளனர்'  என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--