2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

விநோத உருவில் பலூன்கள்

Kogilavani   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமெரிக்காவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விநோத உருவங்களில் பாரிய  பலூன்கள் பறக்கவிடப்பட்ட காட்சியானது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அமெரிக்காவில் வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் வருடாந்தம் கொண்டாடப்படும் நன்றி தெரிவிப்பு நிகழ்விலே இத்தகைய பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.

87 ஆவது தடவையாக கொண்டாடப்படும் இந்நிகழ்வானது இம்முறை நியூயோர்க் நகரில் இம்முறை கொண்டாடப்பட்டது.
இதன்போது, ஸ்பைடர் மேன், மற்றும்  ஸ்கூபி உள்ளிட்ட பல உருவங்களை கொண்ட 16 பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வினை நேரடியாக 3.5 மில்லியன் மக்களும் தொலைக்காட்சி மூலமாக 50 மில்லியன் மக்களும் பார்வையிட்டுள்ளனர்.  

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரத்தை தாக்கிய புயல்காற்றுக் காரணமாக நன்றி தின நிகழ்வில் பலூன்களை முறையாக பறக்கவிடாமல் போகும் என பார்வையாளர்கள் பயந்தபோதும் அவர்களது கரகோஷத்தினால் பலூன்கள் மிகவும் உயரத்தை நோக்கி வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டுள்ளன.

இந்நிகழ்வினை பார்வையிடுவது ஒரு பரவசத்தை ஏற்படுத்துவதுடன் மில்லியன் கணக்கிலான மக்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கூடுவது ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக பார்வையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். (படங்கள்- எ.எப்.பி, ஏ.பி, ரொய்ட்டர்ஸ்)







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--