2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

முதலையுடன் விளையாடிய 3 வயது குழந்தை

Kogilavani   / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரேஸிலைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 3 வயது குழந்தை 5 அடி நீளமான முதலையுடன் விளையாடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

தனது வீட்டின் வரவேற்பறையில் செற்றியின் (நாற்காலி) பின்புறமாக முதலை கிடந்ததை அறியாத அந்த பெண் தனது குழந்தையை விளையாடுவதற்காக தரையில் இருத்தியிருந்தார்.

அவளது மகன் வரவேற்பறையில் வைத்து 5 அடி நீளமான அந்த முதலையின் தலையை மிகவும் விருப்பத்துடன் தட்டி தட்டி விளையாடிய வண்ணம் இருந்துள்ளான்.

அந்த பெரிய முதலையானது பார்பாஸ் நகரில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது அடித்து வரப்பட்டது என ஊடகமொன்று செய்தி  வெளியிட்டுள்ளது

தீயணைப்பு படையின் தலைவர் லூயிஸ் கிளவ்டியோ இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில்,

'அவளது மகன் அந்த நாற்காலியின் பின்புறமாக இருந்து எதையோ விளையாடிக்கொண்டிருந்துள்ளான். அவள் அந்த இடத்தை சுத்தம் செய்வதற்காக சென்று பார்த்தபோதுதான் அவன் பெரிய முதலையுடன் விளையாடுகிறான் என்பதை அறிந்துள்ளாள்.

உடனே அந்தக் குழந்தையை அவள் தூக்கியெடுத்துள்ளதுடன், எங்களையும் கதறி அழைத்தாள்' என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த முதலை மட்டும் பசியுடன் இருந்திருந்தால் நிச்சயம் அந்த குழந்தையை காயப்படுத்தியிருக்கும் அல்லது கொன்றிருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் அந்த முதலையை பிடித்து அருகிலுள்ள சரணாலயத்தில் விட்டுள்ளனர்.

இந்த நகரம் ஆறுகளும்,  நீர்வீழ்ச்சிகளும் அதிகமாக இருக்கும் இடத்தில் அமையப்பெற்றுள்ளது. இதனால்தான் இந்த முதலை மற்றும் பாம்பு போன்றவை இம்மக்களின் வீடுகளில் வந்து தங்கிவிடுகின்றன என்று அந்த தீயணைப்பு படையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--