2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

3 வயது மகனை சலுவை இயந்திரத்தில் நுழைத்து கொலைசெய்த தந்தை

Kogilavani   / 2011 நவம்பர் 29 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாலர் பாடசாலையில் சக மாணவனின் ஓவியத்தை தூக்கியெறிந்த குற்றத்திற்காக தனது 3 வயது மகனை சலவை இயந்திரத்தினுள் நுழைத்து இயந்திரத்தை இயக்கி கொலை செய்த நபரை பிரெஞ்சு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாரிஸ் நகருக்கு அருகிலுள்ள மியூக்ஸ் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோப் செம்பெனோய்ஸ் (வயது 33) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர், பாலர் பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த தனது 3 வயது மகனான பெஸ்டியனை இவ்வாறு சலவை இயந்திரத்தினுள் நிர்வாணக் கோலத்துடன் இட்டு குளிர் சுழற்சி நீராட்டத்தில் சில நிமிடங்கள் சுழலவைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

சிறுவனின் தாய் கெராலின் (வயது 25) சலவை இயந்திரத்திலிருந்து குறித்த சிறுவனை கண்டுபிடித்துள்ளார்.

ஆனால் மேற்படி பெண் தன் வீட்டின் அருகில் வசித்து வந்த அலைஸ் என்பவரிடம் ஓடிச் சென்று, தனது மகன் சலவை படிக்கட்டில் வீழ்ந்து விட்டதாக கூறினார்; என பிரெஞ்சு பத்திரிகையொன்று  செய்தி வெளியிட்டுள்ளது.

ஏலியஸ் இதுக் குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், 'அவனை நான் தூக்கியபோது அவனது  மூட்டுக்கள் ஒரு பொம்மையின் மூட்டுக்களை போன்று தளர்ந்து காணப்பட்டன. அவனது இறுதி இதயத்துடிப்பை நான் உணர்ந்தேன். அதன்பின் அவன் இறந்து விட்டான்' எனக் கூறினார்.

பெஸ்டியனின் 5 வயது சகோதரி இது தொடர்பில் தெரிவிக்கையில், தனது தந்தை இவ்வாறு பெஸ்டியனை தண்டிப்பதற்காக சலவை இயந்திரத்திற்குள் நுழைத்தது இது முதல்தடைவ அல்ல எனக் கூறியுள்ளாள்.

அச்சிறுவன் முன்னர் கபர்ட்டு போன்றவற்றிலும் பல மணித்தியாலங்கள் அடைத்து வைக்கப்படுவது வழக்கமென அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெஸ்டியனை கிறிஸ்டோபிற்கு ஆரம்பத்திலிருந்தே பிடிப்பதில்லையென பெஸ்டியனின் பாட்டி தெரிவித்துள்ளார்.

'பெஸ்டியன் பிறந்த செய்தியை கூறியபோது கிறிஸ்டோபர் வெளியில் சென்று மது அருந்திக் கொண்டிருந்தார். நாம் ஆண் குழந்தை பிறந்ததாக கூறியபோது அக்குழந்தை தனக்கு தேவையில்லை என அவர் கூறினார்' என்று பெஸ்டியனின் பாட்டி  மேலும் தெரிவித்துள்ளார்.

செம்பெனோய்ஸ் மீது குழந்தையை கொன்றதாக பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இக்குற்றத்தை தடுக்கத் தவறியதாக அவரின் மனைவி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் ஏனைய பிள்ளைகள் அரசாங்கத்தின் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 


  Comments - 0

 • asker Wednesday, 30 November 2011 08:57 PM

  அவனது ....... அறுக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் பிள்ளைகளை பெற்று கொள்ளுவான்.

  Reply : 0       0

  usaidh Sunday, 04 December 2011 02:50 PM

  இவன் தந்தையாக இருக்க முடியாது. மிருகம்.

  Reply : 0       0

  Rakees Friday, 02 December 2011 02:53 AM

  எப்படித்தான் அந்த பிஞ்சு உசுர கொள்ள மனம் வந்திச்சோ?

  Reply : 0       0

  marani Tuesday, 29 November 2011 10:45 PM

  இவனையும் சலவை இயந்திரத்தினுள் இட்டு கொலை செய்ய வேண்டும்.

  Reply : 0       0

  meenavan Tuesday, 29 November 2011 10:52 PM

  அட பாவி என்ன கொலைவெறி இது? அந்த பிஞ்சு மகன் உனக்கு செய்த தவறு என்ன? கொலை செய்த உனக்கு என்ன தண்டனை?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .