2021 மார்ச் 01, திங்கட்கிழமை

‘அனுமதியின்றி தனியாருக்கு காணி’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஜூலை 19 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி ஊற்றுப்புலம், சோலை நகர் ஆகிய பகுதிகளில் எந்தவித அனுமதிகளுமின்றி, 10 ஏக்கர் வரையான காணி, தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் குறித்த காணியை மீளப்பெற்று அப்பிரதேசத்தில் காணிகளற்ற குடும்பங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஊற்றுப்புலம் கிராமத்தில் சுமார் ஐந்து ஏக்கருக்கு மேற்பட்ட காணியும் சோலைநகர்ப்பகுதியில் 7 ஏக்கர் வரையான காணியும், தனிநபர்கள் இருவருக்கு, சட்டத்துக்கு முரணான வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தப் பிரதேசங்களிலேயே, காணிகளற்ற பல ஆயிரக்கணக்கான பல குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு கால் ஏக்கர் காணிகள் கூட வழங்கப்படாத நிலையில், அந்த மக்கள், எந்தவிதமான வீட்டுத் திட்டங்களையும் பெற்றுக்கொள்ளமுடியாது வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், குறித்த காணி விடயம் தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது, முன்னாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாரின் சிபாரிக்கு அமைவாக, அவராலேயே குறித்த இரண்டு இடங்களிலும் நிலஅளவை செய்யப்பட்டு காணிகள் வழங்கப்பட்டன. அவை எந்த நோக்கத்துக்காக வழங்கப்பட்டதென்று தனக்குத் தெரியாதென, கரைச்சிப் பிரதேச செயலர் கோ. நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .