2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

அம்மாச்சி உணவகம் திறந்து வைப்பு

Menaka Mookandi   / 2016 ஜூலை 15 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்கள வளாகத்தில், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் 5.5 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பாராம்பரிய உணவுப்பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்களின் விற்பனை நிலையம், இன்று வெள்ளிக்கிழமை (15) திறந்து வைக்கப்பட்து.

வடமாகாண விவசாய அமைச்சின் 2014ஆம், 2015ஆம் ஆண்டுகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து, 5.5 மில்லியன் ரூபாய் செலவில் கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்கள வளாகத்தில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் விவசாய விரிவாக்கச் செயற்பாடுகள் விவசாய பொருட்களின் விற்பனைக்கூடம் என்;பன உள்ளடக்கிய அம்மாச்சி உணவகம், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் திறந்து வைக்கப்பட்டது.

இதில், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, வை.தவநாதன் மற்றும் அமைச்சின் செயலாளர் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்;க அதிபர் உயர் அதிகாரிகள் எனப்பலர் கலந்;து கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .