2021 ஜனவரி 20, புதன்கிழமை

அரசியலமைப்பு தொடர்பில் கூட்டமைப்பு கலந்துரையாடல்

George   / 2016 ஜூலை 16 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

புதிய அரசியலமைப்பு வியடங்கள் மற்றும் தேர்தல் திருத்தம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று காலை 10.30 மணியளவில் வவுனியாவில் கூடியது.

அரசியலமைப்பு சீர்திருத்த விடயங்கள் மற்றும் புதிய தேர்தல் முறைமைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான                   இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .