Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2018 மார்ச் 18 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பரமணியம் பாஸ்கரன்
தேவையான அனைத்து வளங்களும் வருமானங்களோடும் வாழ்ந்த எங்களது உறவுகளைப் பறித்தது மட்டும் அல்லாது, எங்களை கையேந்தி வாழும் நிலைக்கு, இந்த அரசாங்கம் தள்ளியிருக்கின்றது என, கேப்பாப்புலவில் நிலத்துக்காகப் போராடி வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு பகுதியில், தமது நிலங்களை விடுவிக்கக் கோரி கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வீதியில் போராடி வரும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது போராட்டத்தை தொடர்ந்து வருவதாகவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை, அந்த இடத்திலேயே, மூன்று நேர உணவையும் சமைத்து உண்ணுகின்ற அதேநேரம், எந்தவித தொழில்களுக்கும் செல்லாது, வருமானங்கள் இன்றி இப்போது போராட்டத்தில் ஈடுபடுகின்ற தாங்கள், ஒரு நேர உணவைப் பெறுவதற்கே பல்வேறு கஷ்டத்தை எதிர்கொள்வதாகவும் பலர் ஆதரவுகளை வழங்கியிருந்தாலும் தமக்கு உதவிகளை வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற கணபதிப்பிள்ளை மனோன்மணி (வயது 72) என்ற வயோதிப் பெண் கருத்துத் தெரிவிக்கையில்.
தாம் கேப்பாப்புலவு பூர்வீக நிலத்தில் பிறந்து வளர்ந்தாகவும் தங்களுடைய ஐந்து தலைமுறைகளுக்கும் மேல் இந்த மண்ணிலே வாழ்ந்ததாகவும் தங்களது காணி தேவையான வருமானங்களைத்தரக் கூடிய அனைத்து வளமும் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஐந்து பிள்ளைகளுடன் வாழ்ந்த தனது குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் யுத்தத்தால் உயிரிழந்துள்ளனர். இப்போது பிள்ளைகளும் இல்லை, வீடும் இல்லை, எந்த வருமானமும் இல்லை. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய கணவரும் தானும் ஒரு நேர உணவுக்கே பெரும் கஷ்டப்படுகின்ற நிலையில் உள்ளோம்.
இப்போது கணவரின் நோய்கான கொடுப்பனவாக மாதாந்தம் 5,000 ரூபாயும் பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவாக 300 ரூபாயும் மாத்திரமே கிடைக்கின்றது. இதை வைத்து எப்படி வாழ்வது என்றே தெரியாத நிலையில் இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
2 hours ago