2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

‘இராணுவத்தினரால் நகர அபிவிருத்திக்குத் தடை’

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில், சுமார் 38 சதவீதமான நிலப்பரப்பு தொடர்ந்தும் இராணுவத்தினர் வசமுள்ளதால், நகர அபிவிருத்திக்குப் பெரும் தடையாக உள்ளதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைக்கும் தடையாக உள்ளததெனவும் குறிப்பிட்டார்.

இது குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தில், மக்கள் மத்தியிலும் நகரத்திலும் பெருமளவான காணிகள் இன்னமும் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்து வருகிவதாகவும் இவ்வாறுள்ள இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில், இன்னமும் 38 சதவீதமான நிலப்பரப்பு நகரப்பகுதியில் உள்ள நிரப்பரப்பு இராணுவத்தினர் வசமுள்ளதாகவும் இதனால் கிளிநொச்சி நகரத்தை ஒரு நகர வடிவமைப்புக்குள் கொண்டு வரமுடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில், தங்களின் இடங்களில் நின்மதியாக சுதந்திரத்தோடு வாழுகின்ற சூழல் இன்னமும் உருவாக்கப்படவில்லையெனத் தெரிவித்த அவர், நகரை திட்டமிட்டு அபிவிருத்தி செய்வதற்கு பல்வேறுபட்ட இடங்கள் தடையாகவுள்ளனவெனவும் குறிப்பிட்டார்.

எனவே யாழ்ப்பாணத்துக்கு ஒரு நகரம் உள்ளது. முல்லைத்தீவுக்கு நகரம் இருக்கின்றது.  வவுனியாவுக்கு நகரம் உள்ளது. அதேபோன்று கிளிநொச்சிக்கும் ஒரு நகரம் அமையவேண்டும். எனவே இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விட்டு வெளியேற வேணடும் என, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .