2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

ஈச்சங்குளத்தை ஆழமாக்குங்கள்

Administrator   / 2016 ஜூலை 13 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் அமைந்துள்ள ஈச்சங்குளத்தினை ஆழப்படுத்தி, விவசாய நடவடிக்கைகளுக்கு வழியேற்படுத்துமாறு அக்கிராம விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிறிய குளமாகிய இக்குளம், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர், அக்கராயன் கமநல சேவை நிலையத்தினால் புனரமைக்கப்பட்டது. இதன் பின்னர், இக்குளத்தில் கூடுதலான நீர் காணப்படுகின்றது. இக்குளத்தின் நீர் கால்நடைகளின் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுகின்றது.

இதனை விட, கடல் மட்டத்திலிருந்து 115 அடி உயரத்திலுள்ள பகுதியில், இக்குளம் அமைந்திருப்பதன் காரணமாக, இப்பகுதியிலுள்ள கிணறுகளின் நீர்மட்டத்தினை தீர்மானிக்கின்றதாக இந்தக் குளம் காணப்படுகின்றது.

இந்நிலையில், அக்கராயன் குளத்திலிருந்து ஸ்கந்தபுரம் கிராமத்துக்கு ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், ஏற்று நீர்ப்பாசனத்தினூடாக இக்குளத்துக்கு நீர் நிரப்புவதன் மூலம் இக்குளத்தைச் சூழவுள்ள விவசாயிகள் பயிர்ச் செய்கையில் ஈடுபடமுடியும்.

அத்துடன், அக்கராயன் மத்திய பிரதேசத்தில் நிலத்தடி நீரையும் பேண முடியும். ஆகவே, இதற்காக குளத்தை ஆழப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .