2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

ஈரப்பெரியகுளத்தில் திடீர் சோதனை நடவடிக்கை

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வவுனியா - ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வீதியில், பொலிஸார் சோதனை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே, இந்தச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவெனத் தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கமைய, கண்டி நெடுஞ்சாலை ஊடாக செல்லும் வாகனங்களை மறித்து, தீவிர சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.  

அத்துடன், பயணிகளின் பொதிகளும் ஸ்கானர் இயந்திரத்தைக் கொண்டு சோதனைக்குட்படுத்தப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .