2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

ஈரோஸ் அமைப்பின் இளையோர் மாநாடு

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

ஈரோஸ் அமைப்பின் இளையோர் மாநாடு, இன்று (05), ஈரோஸ் அமைப்பின் தலைவர் எஸ்.துசியந்தன் தலைமையில், வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

“எதிர்காலத்துக்கான இளைஞர்கள்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில், எதிர்காலத்தில் இளைஞர்கள் அரசியலுக்குள் உள்ளவாங்கப்பட வேண்டும், பொருளாதார மேம்பாடுகளை எவ்வாறு கிராம மட்டங்களிலிருந்து கொண்டு செல்வது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துகள் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வில், ஈரோஸ் அமைப்பின் தலைவர் எஸ்.துஸ்யந்தன், அமைப்பின் தேசிய அமைப்பாளர் மாணிக்கம் ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--