2025 ஒக்டோபர் 27, திங்கட்கிழமை

உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

விளையாட்டுக்கழகங்கள், சனசமூக நிலையங்கள், பாடசாலைகளுக்கான உதவித் திட்டங்கள் வழங்கும் நிகழ்வு, வவுனியா தமிழ் ஈழ விடுதலை இயக்க அலுவலகத்தில், நேற்று (23) நடைபெற்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் 2019ஆம் ஆண்டு குறித்தொதுக்கப்பட்ட பத்து இலட்சம் ரூபாய் நிதியில் இருந்து, இந்த உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன், பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலா கோகிலகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .