2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

’உரத்தின் விலை சுடுகிறது’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2019 நவம்பர் 11 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தனியார் வர்த்தக நிலையங்களில், கட்டுப்பாட்டு விலையை மீறி, அதிக விலையில் உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில், தற்போது காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளுக்கான மானிய உரம், கமநலசேவை நிலையங்களூடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இருந்தபோதிலும், விவசாயிகளுக்கான உரவகைகள் போதுமானதாக இல்லாத காரணத்தால், கமநலசேவை நிலையங்களின் மூலம் விற்பனை செய்யப்படும் உரத்தையும் விவசாயிகள் கொள்வனவு செய்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது, கமநலசேவை நிலையங்களில் விற்பனைக்கான உரம் இல்லாத நிலையில், தனியார் வர்த்தக நிலையங்களில் உரத்தைக் கொள்வனவு செய்வதாகவும் எனினும், கட்டுப்பாட்டு விலையையும் மீறி அவை விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனால், விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கமநலசேவை நிலையத்தில் போதிய உரம் இன்மையே இதற்குக் காரணம் என்றும் எனவே, உரிய அதிகாரிகள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X