Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஜூலை 15 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, வன்னேரிக்குளம் கிராமத்தின் குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள உவரடைந்த நிலப்பகுதியில், ஆமணக்கு போன்ற பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளுமாறு அக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில், உவரடைந்த 450 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்களில், உவர் நிலத்தில் வளரக்கூடிய ஆமணக்கு போன்ற பயிர்களை நாட்டுவதென முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது, குஞ்சுக்குளம் கிராமம், முழுமையாக உவரடைந்த நிலையில், 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. இந்நிலையில், இக்கிராமத்தில் வளரக்கூடிய பயிர்களை நாட்டுவதன் மூலம், உவர் நிலத்தினையும் பயனுள்ளதாக மாற்றலாம்.
பூநகரியின் மண்டைக்கல்லாறு வழியாக கடல் நீர் உட்புகுவதன் காரணமாக, பூநகரியின் பல பூர்;வீகக் கிராமங்கள் உவரடைவதன் தொடர்ச்சியாக, கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான்குளம் ஆகிய இரு கிராம அலுவலர் பிரிவுகளும், முழுமையாக உவரடையும் ஆபத்தினை எதிர்கொண்டுள்ளன.
2000ஆம் ஆண்டில், பூநகரியின் பல்லவராயன்கட்டு பிரதேசம் உவரடையத் தொடங்கியுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்ட போதிலும், தற்காப்பு முயற்சிகள் எடுக்கப்படாததன் காரணமாக, இக்கிராமம் தற்போது முழுமையாக உவரடைந்துள்ளது.
22 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago