2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

Editorial   / 2020 ஜனவரி 03 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு, கள்ளப்பாடு தெற்கு கடற்கரைப் பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன் இருவரை, பொலிஸார் இன்று(3) கைதுசெய்துள்ளனர்.

கள்ளப்பாடு தெற்குக் கடற்கரைப் பகுதியில், ஐஸ் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைத் தொடர்பில், முல்லைத்தீவு பொலிஸாருக்கு, இரகசியத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்தததுடன், அவர்களிடமிருந்து 475 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.

புத்தளம், கள்ளப்பாடு தெற்கு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .