2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

கச்சதீவுக்கான பயணம் ஆரம்பம்

Editorial   / 2020 மார்ச் 06 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.றொசேரியன் லெம்பேட், என்.ராஜ்

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்தத் திருவிழா, நாளை சனிக்கிழமை (7) காலை இடம்பெறவுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (06) மாலை 4 மணிக்கு,  கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாவதுடன் திருச்சொரூப செபமாலையும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.

நாளை சனிக்கிழமை காலை, திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், தலைமன்னார் கடற்கரையில் இருந்தும் வடக்கே யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் இரங்கல் துறையிலிருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், படகுகள் மூலம் கச்சதீவை நோக்கிப் பயணமாகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .