Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்களத்தினால் விவசாயக்கிணறுகள் அமைக்கப்பட்டதற்கான காசோலைகள் மற்றும் விதை உற்பத்திப் பொருட்கள் விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கிளிநொச்சியில் அமைந்துள்ள மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்களத்தில் இன்று (19) காலை 9.30 மணிக்கு, பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அற்புதச்சந்திரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
கூட்டிணைந்த சமூக பொறுப்பு நிதியத்தின் ஊடாக விவசாயக்கிணறுகள் அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட 100 பயனாளிகளில் முதற்கட்டமாக 47 பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் 2018ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விதை தானியங்களும் விவசாய உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
1 hours ago
8 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
02 Nov 2025
02 Nov 2025