2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

கிராமங்களுக்குச் செல்லாத கடலுணவுகள்

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவுக் கடலில் பிடிக்கப்படுகின்ற கடலுணவுகள், கொழும்புக்கு ஏற்றுமதி செய்யப்படுவதன் காரணமாக, மாவட்டத்தின் கிராமங்களுக்கு கடலுணவுகள் சென்றடைவதில்லையென, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மக்கள், கடல் உணவுகளைப் பெற்றுக் கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும், தெரிவித்துள்ளனர்.

கடல் உணவுகளை கொண்டு வருகின்ற சில வியாபாரிகளும், கூடுதலான விலைகளில், கிராமங்களில் விற்பனை செய்வதாகவும், அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த காலங்களில், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களின் போது, முல்லைத்தீவில் உள்ள கிராமங்களுக்கு, கடல் உணவுகள் சென்றடைவதில்லையென்று முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லையெனவும், அப்பகுதி மக்கள் சாடியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .