2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

கரையொதுங்கிய வௌ்ளைப் புள்ளி சுறா

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, அலம்பில் கடற்கரையில் கரையொதுங்கிய வெள்ளைப் புள்ளி சுறா மீனை காப்பற்றிய கடற்படையினர், அதனை மீண்டும் கடலில் கொண்டு சென்றுவிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மீன்பிடி ஆய்வாளர் அலுவலகத்தின் ஆய்வாளர் மொஹான் குமார, அலம்பில் கடற்படை அதிகாரிகளுக்குக் கரையொதுங்கிய சுறா மீன் குறித்து அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, கடற்படையினர் கடும் சிரமப்பட்டு, குறித்த சுறா மீனை மீட்டு, 3 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் கொண்டுச் சென்று விட்டுள்ளனர்.

சுறா குடும்பத்தை சேர்ந்த மிகப் பெரிய உயிரினமான வெள்ளை புள்ளி சுறா மீன், சுமார் 900 கிலோகிராம் எடை கொண்டதாகவும், 9 மீற்றர் நீளம் கொண்டதாகவும் இருக்கும்.

இந்த வகை சுறா மீன்கள் 70 முதல் 100 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவையாகும். மேலும் இந்த மீன் இனம் உலகில் அருகி வரும் மீன் இனம் என அறிவிக்கப்பட்டுள்ளளதுடன், இலங்கையில் இந்த மீனைப் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--