Princiya Dixci / 2016 மார்ச் 22 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, கரைச்சி பிரதேசத்தில் 10,884 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலகத்தின் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த கால இடப்பெயர்வினைத் தொடர்ந்து கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள 42 கிராம அலுவலர் பிரிவுகளிலும் 23,278 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.
இவ்வாறு மீள்குடியேறியுள்ள 10,884 குடும்பங்களுக்கு பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியுதவியுடன் பல்வேறு வகையான அவர்களது தொழில் முயற்சிகளை கருத்திற்கொண்டு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதாவது 3985 குடும்பங்களுக்கு விவசாயத்திற்கான வாழ்வாதார உதவிகளும் 4920 குடும்பங்களுக்கு கால்நடை வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவிகளும் 165 குடும்பங்களுக்கு மீன்பிடித் தொழிலுக்கான வாழ்வாதார உதவிகளும் 1814 குடும்பங்களுக்கு கைத்தொழில்;களுக்கான வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .