2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

கல்மடுவின் கீழ் 1,350 ஏக்கரில் சிறுபோகம்

Niroshini   / 2016 மார்ச் 28 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி கல்மடுக்குளத்தின் கீழ் 1,350 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார்.

இந்தக் குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை தொடர்பில் கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அக்கராயன், வன்னேரிக்குளம், புதுமுறிப்புக்குளம் என்பவற்றின் கீழான சிறுபோகச் செய்கை தொடர்பான கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளதாகவும் கரியாலை நாகபடுவான், குடமுருட்டி, பிரமந்தனாறு, கனகாம்பிகைக்குளம் என்பவற்றின் கீழ் சிறுபோக நெற்செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாகிய இரணைமடுக்குள புனரமைப்பு வேலைகள் நடைபெறுவதன் காரணமாக, அந்தக் குளத்தின் கீழ் இடைப்போகமாக 4,000 ஏக்கரில் உபஉணவுப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X