2021 ஜனவரி 20, புதன்கிழமை

கிளிநொச்சி விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Editorial   / 2019 நவம்பர் 12 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சியில் இன்று (12) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். 

கிளிநொச்சி முறிப்பு பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த விபத்தில் பரந்தன் பகுதியை சேர்ந்த 34 வயதான இராசரத்தினம் சந்திரகுமார் என்ற நபர், ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். 

பரந்தனிலிருந்து முறிப்பு பகுதியில் அமைந்துள்ள சகோதரியின் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கெப் ரக வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன், வாகனத்தை செலுத்திய சாரதி, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .