2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

கழிவுநீர் அகற்றல் செயற்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில்,  கழிவு நீர் அகற்றல் செயற்பாடுகளுக்காக, 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, நானாட்டான் பிரதேச சபைத் தவிசாளர் தி.பரஞ்சோதி தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துக் கரு​த்துரைத்த அவர், குறித்தப் பாலங்களில் கழிவு நீர் அகற்றுவதற்காக பொருத்தப்பட்டிருந்தக் குழாய்கள் பழுதடைந்துள்ளதாகவும் இதனால், மழைக் காலங்களில், கழிவு நீரானது வெளியேற்றப்படாமல், கிராமங்களுக்குள் தேங்கி நிற்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கமைய, பழுதடைந்துள்ள கழிவுநீர் குழாய்களைத் திருத்தம் செய்ய வேண்டிய கிராமற்களாக, வங்காலை, நறுவிலிக்குளம், மடுக்கரை, ஒலிமடு மற்றும் செட்டியார் கட்டையடம்பன் ஆகிய கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,  அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X