2021 மே 06, வியாழக்கிழமை

650 குடும்பங்களுக்கு உலர் உணவுகள்

Gavitha   / 2015 நவம்பர் 20 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

கடந்த தினங்களாக பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு, மன்னார் மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள சுமார் 650 குடும்பங்களுக்கான உலர் உணவுகள், இன்று வெள்ளிக்கிழமை (20) வழங்கப்படவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு, வெள்ள நிவாரணம் வழங்கப்படவேண்டும் என்று மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள்  உடனடியாக வழங்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் வடமாகாண விவசாய கால்நடை அமைச்சர் பொ.ஜங்கரநேசனின் ஏற்பாட்டில், இந்த உலர் உணவுகள் வழங்கப்படவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .