2021 மே 08, சனிக்கிழமை

காணிகளை விடுவிக்ககோரி இளைஞர்கள் போராட்டம்

George   / 2016 ஜூலை 22 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்க நடவடிகை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாய்களை கறுப்பு நிற துணிகளால் கட்டியவாறு ஊர்வலமாக வந்த இளைஞர் - யுவதிகள், வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை இராணுவம் மக்களின் காணிகளை அபகரித்துள்ளமையினால் வடபகுதி மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதுடன் முகாம்களிலும் உறவினர்களின் விடகளிலும் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், காணிப் பிரச்சினையில் அரசியல் நாடகம் வேண்டாம், இராணுவம் ஆக்கிரமித்த காணிகளை உடனடியாக விடுதலை செய், நல்லாட்சியே மாற்றத்தை நாம் தந்தோம் மறந்துவிட்டாய், போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

சுமார் 30 நிமிடங்கள் வரை இராணுவ முகமுக்கு முன்பாக இடம்பெற்ற இப்போராட்டத்தை அடுத்து போராட்டக்காரர்கள், ஓமந்தை நோக்கி பயணித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X