2021 மார்ச் 01, திங்கட்கிழமை

காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரான சர்வதேச தினம் மன்னாரில் அனுஸ்டிப்பு

George   / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரான சர்வதேச தினம் நாளை ஞாயிற்றுக்கிழமை(30) மன்னாரில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அடிகளார் தலைமையில், வட கிழக்கு மாகாண காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் சங்கம், மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவை இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள டிலாசார் இல்லத்தில் காலை 10 மணி முதல் 12 மணிவரை குறித்த நிகழ்வு இடம் பெறவுள்ளது.

இதன் போது காணாமல் போன, கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் உள்ளக விசாரனைகள் இன்றி சர்வதேச விசாரனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வழியுறுத்தப்படவுள்ளது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினரான தமிழ் சிவில் சமூக அமைப்பின் இணைப்போச்சாளர், அருட்பணி. எழில் இராஜேந்திரம் கலந்து கொள்ளவுள்ளார்.

குறித்த நிகழ்வில் வட கிழக்கு மாகாணங்களில் உள்ள காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகள், மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொது நிலையினர் என பலர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .