Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என். நிபோஜன்
கிளிநொச்சி பொதுச் சந்தையில் மரக்கறிப் பகுதியைக் குத்தகைக்கு எடுத்தவரின் வியாபார நடவடிக்கையால் தாங்கள் பெரிதும் பாதிப்படுவதாக மரக்கறி வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு கீழ் வருகின்ற பொதுச் சந்தையில் மரக்கறிப் பகுதியை குத்தகைக்குப் பெற்ற தனிநபரொருவர் வரி அறவிடும் பகுதியில் வைத்து காலை முதல் மாலை வரை மொத்த மற்றும் சில்லரை வியாபாரத்தில் ஈடுப்படுவதனால் தங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.
குறித்த நபர், மொத்த வியாபாரி என்பதனால் சந்தை மரக்கறி வியாபாரிகளுக்கும் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்து வருகின்றார். அதேவேளை சந்தைக்கு மரக்கறிக்ளைக் கொள்வனவு செய்ய வருகின்ற மாவட்டத்தின் வெளி வியாபாரிகளுக்கும் அவரே மரக்கறிகளை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்கின்றார். இதனால் தங்களிடம் பலர் மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய வருவதில்லை எனவும் சந்தை வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
எனவே, இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளார் கணேசன் கம்சநாதனைத் தொடர்புகொண்டு கேட்ட போது,
'சந்தையைக் குத்தகைக்கு எடுத்தவர் அங்கு குத்தகைப் பணம் மற்றும் வரி அறவீடுகளை மேற்கொள்ளவதற்கே அனுமதியும் ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட முடியாது. இது தொடர்பில் வியாபாரிகளாலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதேச சபையும் இந்த விடயம் தொடர்பில் ஆதாரங்களை தேடிக்கொண்டிருக்கிறது. எனவே, இந்த விடயம் உறுதிப்படுத்தப்படும் போது அவரது நடவடிக்கை உடனடியாக தடை செய்யப்படுவதோடு, ஒப்பந்தமும் இரத்துச் செய்யப்படும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
31 minute ago
40 minute ago
53 minute ago