2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

சுகாதாரத் தொண்டர்கள் தெரிவு: ‘முல்லைத்தீவில் 45 பேர் தெரிவு’

Editorial   / 2020 ஜனவரி 19 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், சுகாதாரத் தொண்டர்கள் நியமனத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக, பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், நீண்டகாலமாக சுகாதாரத் தொண்டர்களாகச் சேவையாற்றி வந்த 11 பேருக்கு, நியமனங்கள் வழங்காத நிலையில், அவர்களின் விவரங்கள், 2015ஆம் ஆண்டு, பிராந்தியச் சுகாதாரச் சேவைகள் திணைக்களத்தின் ஊடாக மாகாணச் சுகாதாரச் சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை நியமனங்கள் வழங்கப்படாத நிலையில், வியாழக்கிழமை (16), முல்லைத்தீவு மாவட்டப் பிராந்தியச் சுகாதரப் பணிமனையில், சுகாதார உதவியாளர்கள் தரம் 111க்கு, 45 பேரை தெரிவுசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .